அரசியல் தமிழகம்

சசிகலாவின் தம்பி மகனின் பிரமாண்ட திருமணம்!சசிகலா, டிடிவி தினகரன் வந்தார்களா?

Summary:

Jai anandh marriage

சென்னை நீலாங்கரையில் உள்ள பண்ணை வீட்டில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்துக்கும் பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்களுக்கு இன்று மன்னார்குடியில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்தின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா அவர்கள் அந்த திருமணத்திற்கு வரவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். தினகரன் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர் அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டனர்.

இந்தநிலையில் இன்று நடந்த திருமணத்தில் பிரிந்த அனைவரும் ஒன்றுசேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக, அமமுக வின் முக்கிய புள்ளிகள் யாரும் திருமண விழாவில் கலந்துகொள்ளவில்லை. அண்ணா திராவிடர் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஜெய் ஆனந்திற்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவு இருப்பதால் அவரது திருமண விழாவில் இளைஞர்கள் பட்டாளம் அலைகடலென திரண்டு இருந்தனர். 


Advertisement