200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்.! உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி.!

200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்.! உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி.!



jabthi notice for privates school

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளை திறக்க முடியாமல், ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால், தனியார் பள்ளிகள் சொத்து வரி, வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் சொத்து வரி கட்டாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 200-க்கும் அதிகமான மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளியும் சுமார் 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரியை செலுத்த தவறினால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என உள்ளாட்சி அமைப்புகள் அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தள்ளது.