70,000 பேருக்கு வேலை வாய்ப்பு! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

70,000 பேருக்கு வேலை வாய்ப்பு! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!



IT park in Chennai


சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை தரமணியில் டிட்கோ மற்றும் டி.எல்.எப் நிறுவனம் இணைந்து ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான வளாகம் அமைக் கப்படுகிறது. இதில் 20 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

it

அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பல புதிய தொழில் முதலீடுகளை தமிழகம் தொடர்ந்து ஈர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. 

மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் அமைப்பதற்கு வசதியாக மற்றொரு பெரிய வளாகம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.  இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.