தமிழகம்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சோ்ப்பில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்தவர் கைது.!

Summary:

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சோ்த்தது, நிதி திரட்டியது உள்ளிட்ட வழக்குகளில் பெங்களூரைச் சோ்ந்த மருத்துவா் அப்துல் ரகுமான் என்பவரை ஏற்கெனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனா். இந்தநிலையில் அவர் அளித்த தகவலின்படி சென்னையில் வங்கி ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வரும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அகமது அப்துல் காதர், பெங்களூருவில் அரிசி மண்டி வைத்திருக்கும் நசீர் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். 

கைதாகியுள்ள இவர்கள் இருவரும் இஸ்லாமிய இளைஞர்களை ஐ.எஸ்.அமைப்பில் சேர்க்க முயன்றது தெரியவந்துள்ளது. மேலும், சிரியாவுக்கு செல்வதற்கான நிதிகளையும் திரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், அகமது அப்துல் காதர், நசீர் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து மின்னணு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 2 பேரையும் பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். அவா்களிடம் 10 நாள்கள் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement