மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி! அதிர்ச்சியடைந்த நபர்!

மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி! அதிர்ச்சியடைந்த நபர்!


iron wire in the tablet


மெடிக்கல் ஸ்டோரில் பல்வலிக்காக ஒரு இளைஞர் வாங்கிய மாத்திரையை பிரித்து பார்த்தபோது அதில் இரும்புக்கம்பி இருந்ததாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கரும்புகடை பகுதியியை சேர்ந்த முஸ்தபா என்பவர் பல் வலி காரணாமாக அருகில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கியுள்ளார். மாத்திரை வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய முஸ்தபா மாத்திரையை சாப்பிடுவதற்காக கவரை பைரித்துள்ளார். அப்போது மாத்திரையில் இரும்புக்கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

iron in tablet

இதனையடுத்து மெடிக்கலுக்கு விரைந்துசென்று கடைக்காரரிடம் இதுகுறித்து புகார் கூறியுள்ளார். கடைக்காரர் சரியான பதில் கூறாததால் உடனடியாக செய்தியாளர்களை அழைத்த அவர் அந்த மாத்திரையை செய்தியாளர்களிடம் காட்டி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். 

மேலும் கோவை நகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே  மாத்திரைக்குள் கட்டுக்கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.