தமிழகம்

கால் நழுவி பள்ளத்தில் விழுந்த எஞ்சினியர்..! முதுகில் குத்தி வயிறு வழியாக வந்த இரும்பு கம்பி..! பதறவைக்கும் சம்பவம்..!

Summary:

Iron rod entered from engineer back to stomach near Thanjavur

கட்டிட வேலையின்போது இரும்பு கம்பி முதுகில் குத்தி வயிறு வழியாக வெளியே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அமைந்துள்ளது பின்னையூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதலாக கட்டிடம் கட்ட உத்தரவு வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவந்துள்ளது. கட்டிட வேலைகளை அதே கிராமத்தை சேர்ந்த என்ஜினியர் ஐய்யப்பன் (26) மேற்பார்வையிடுவந்துள்ளார்.

இந்நிலையில் கட்டிடம் கட்ட தூண்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டி கம்பிகள் நடப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கம்பி நடப்பட்டு கான்க்ரீட் போடப்பட்டிருந்த பள்ளம் அருகே நின்று எஞ்சினியர் ஐய்யப்பன் போனில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென கால் தடுக்கி ஐயப்பன் கான்க்ரீட் குழிக்குள் விழுந்தநிலையில் உள்ளே இருந்த கம்பி ஒன்று ஐயப்பனின் முதுகில் குத்தி வயிறுவலியாக வெளியே வந்துள்ளது. வலியால் துடித்த ஐயப்பனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கம்பியை கட் செய்யும் இயந்திரம் மூலம் கம்பியை நறுக்கி ஐயப்பனை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் முத்துவிநாயகம் தலைமையிலான மருத்துவ குழு நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு வயிற்றுக்குள் இருந்த கம்பியை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். தற்போது ஐய்யப்பன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement