இ-பாஸ் கட்டாயம்.! இ-பாஸ் உடன் வந்தாலும் காய்ச்சல் பரிசோதனை.! செக்போஸ்ட்டில் தீவிர கண்காணிப்பு



Intensive monitoring at the valparai  checkpost

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா எல்லைகளில் சமீப காலமாகவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு சமீபத்தில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில், வால்பாறை சோலையார் அணை சோதனைச்சாவடியில் கேரள பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்பதாலும், தேர்தல் நடத்தை வாகன சோதனை கட்டாயம் என்பதாலும் தீவிர வாகன சோதனை மற்றும் கொரோனா கண்காணிப்பு நடந்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்காக இ-பாஸ் கட்டயாம் என்பதால் வால்பாறை அடுத்த சோலையார் அணையில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இ-பாஸ் உடன் வந்தாலும் அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை பிறகே அனுப்பி வைக்கபடுகின்றனர்.