தோழியுடன் ஏற்பட்ட மோகத்தால் கணவனை விடுத்து தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி!

தோழியுடன் ஏற்பட்ட மோகத்தால் கணவனை விடுத்து தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி!


illegal relation

மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்தவர் சுகன்யா- ராஜேஷ் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் ராஜேஷ் திடீரென விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார்.

இந்நிலையில் சுகன்யா சில நாட்களுக்கு முன்பு குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது பள்ளி வயது தோழியான எப்சிபாவை சந்தித்துள்ளார். அப்பொழுது எப்சிபா ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறி விட்டதாக கூறியுள்ளார்.தன் பெயரை கூட கெய்சன் ஜோஸ்வா என மாற்றி வைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியதோடு மட்டுமின்றி செல்போன் நம்பர்களை மாற்றி கொண்டுள்ளனர்.

அதன்பிறகு செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் சுகன்யாவிற்கு எப்சிபா மீது மோகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து எப்சிபா, நான் இருக்கேன் உனக்கு, நீ எதுக்கும் கவலைப்படாதே, என்னுடன் வந்து விடு, புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்கலாம் என கூறி சுகன்யாவை அழைத்துள்ளார்.

உடனே சுகன்யாவும் தனது மகள் மற்றும் கணவரை விட்டு விட்டு தோழியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் சுகன்யாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்துள்ளனர். ஆனால் சுகன்யா வர மறுத்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.