தமிழகம்

நள்ளிரவில் தீயில் எரிந்தபடி ஓடிய விதவை பெண்! அம்பலமான கள்ளகாதலனின் கொடூரம்!

Summary:

Illegal lover killed widow women

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, நங்கவள்ளி மசக்காளியூரில் வசித்து வந்தவர் செந்தில்குமார். இவருக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இவர் மேட்டூரில் கறிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார்.கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். செந்தில்குமார் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளது.

 இந்நிலையில் கொளத்தூர் அய்யம்புதூரைச் சேர்ந்த பார்வதி என்பவருடன்  செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பார்வதி செந்தில்குமாரை அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகிவந்துள்ளார்.  இவ்வாறு சமீபத்திலும் செந்தில்குமார் பார்வதியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் பார்வதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பார்வதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பார்வதி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் சிவகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர், நாங்கள் பலமுறை ஒன்றாக இருந்துள்ளோம்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது வீட்டுக்கு சென்ற போது பார்வதி எனது ஆசைக்கு இணங்கவில்லை. மேலும் அவருக்கு வேறு சில நபர்களுடன் தொடர்பு இருந்தது. இந்நிலையில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துவிட்டு ஓடிவிட்டேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


Advertisement