தமிழகம்

குழந்தை, குடும்பத்தை மறந்து கள்ளகாதல் ஜோடியின் செயல்.! பரிதவிக்கும் இரண்டு குடும்பம்.!

Summary:

கன்னியாகுமரி மாவட்டம் சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 25  வயது நிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 25  வயது நிரம்பிய இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வாகனம் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை இருந்த சுபாஷ் என்பவரின் மனைவி வித்யா என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் வித்யாவுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த வித்யா, சுரேஷ்குமாருடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரிந்ததையடுத்து சுரேஷ்குமாரை கண்டித்து, சுரேஷ்குமாருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர்.

இந்தநிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாருக்கு திருமணம் நடந்தது. தற்போது சுரேஷ்குமாரின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணத்திற்கு பிறகும் கள்ளக்காதலியை தொடர்பு கொண்டு அவரை சந்தித்து இருவரும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வித்யாவின் கணவருக்கு தெரியவந்ததையடுத்து அவர் வித்யாவை கண்டித்துள்ளார். 

இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் மாயமானார்கள். சுரேஷ்குமார், வித்யா இருவரும் மாயமானது குறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வந்தநிலையில் அவர்கள் இருவரும் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்ததும் சுரேஷ்குமார், வித்யா இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். வித்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் வித்யாவும் சிகிச்சைபாலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளகாதல் ஜோடியின் சுய சந்தோஷத்திற்க்காக அப்பாவி இரண்டு குடும்பங்கள் தவித்து வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement