மதுபாட்டிலுடன் "இல்லம் தேடி கல்வி" பிரச்சார வாகனத்தில் பயணம்..! வீடியோ வெளியாகி பேரதிர்ச்சி.!

மதுபாட்டிலுடன் "இல்லம் தேடி கல்வி" பிரச்சார வாகனத்தில் பயணம்..! வீடியோ வெளியாகி பேரதிர்ச்சி.!


illam thedi kalvi member in tasmac

சமீபத்தில் தமிழ்நாட்டில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியிருந்தார். தன்னார்வலர்களைக் கொண்டு இந்த திட்டத்தின் மூலம் கல்வியை மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டம் வகுந்திருந்தது. கொரோனா ஊரடங்கால் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்தநிலையில், திருச்சியில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 8 கலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் விழிப்புணர்வு கலைக் குழுவை சேர்ந்த நபர் ஒருவர், சீருடை அணிந்தவாறு டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி சென்றார். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சென்ற கலைக்குழுவினரை, இல்லம் தேடி திட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருந்து நீக்கி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.