வயது 13 தான் ஆகுது! மருத்துவர் கொலையாளியின் மனைவி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

வயது 13 தான் ஆகுது! மருத்துவர் கொலையாளியின் மனைவி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!



hydrabad-doctor-murder-case-accused-wife-just-13-years

கடந்த மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசாரின் பிடியில் இருந்து நான்கு குற்றவாளிகளும் தப்பித்துச் செல்ல முயன்றபோது போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

Doctor murder case

சுட்டுக் கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவரான சென்ன கேசவலுவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. மேலும் சென்னகேசவலுவின் மனைவி கடந்த 2006 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே திருமணம் நடந்ததும் அம்பலமாகியுள்ளது.

பெற்றோர் இல்லாத அந்தப் பெண் தற்போது தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல காப்பகம், ஒரு வாரத்திற்குள் அந்த பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னகேசவலுவின் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளனர்