திருமணமான பெண்ணுடன் இளைஞனுக்கு முறையற்ற உறவு! கணவர் கண் முன்பே நடந்த கசமுசா! தீர்த்து கட்டிய கணவன்!husbund-killed-young-boy-for-his-wife-illegal-affair

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரகுவரன் என்பவர் மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுவரன் குடிக்கு அடிமையானவர். இதனால் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் மகாலட்சுமியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மகா லட்சுமி, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சென்னை வந்து, திருவொற்றியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு விக்னேஷ் (25) என்பவருடம் மகா லட்சுமி பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிய்து.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி, குழந்தைகளுடன் திண்டிவனம் சென்று ரகுவரனுடன் வசித்து வந்துள்ளார். அங்கிருந்தும் செல்போனில் விக்னேஷுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார். இந்தநிலையில் விக்னேஷை திண்டிவனத்திற்கு வரவழைத்துள்ளார் மகாலட்சுமி.

illegal affair

இதனையடுத்து மகாலட்சுமியின் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார் விக்னேஷ். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் வெளியே சென்றிருந்த ரகுவரன் திரும்பியதால், இருவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து மகாலட்சுமியை குத்த முயன்றார்.

விக்னேஷ் தடுக்க வந்ததால், அவர் மீது சரமாரியாக கத்தி குத்து விழ, அதே இடத்தில் விக்னேஷ் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துகிடந்த விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விக்னேஷை கொலைசெய்த ரகுவரன் மற்றும் மகாலட்சுமியை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.