கணவன் கண்டித்தும் தீராத ஆசை! இளம் மனைவியால் மகன் மற்றும் கணவனுக்கு நேர்ந்த கொடுமை!

Husband suicide with son for wife chat with male friend


husband-suicide-with-son-for-wife-chat-with-male-friend

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு விதங்களில் மனிதனுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும், அதுவே ஒருசில நேரங்களில் எமனாகவும் அமைந்துவிடுகிறது. இந்நிலையில் ஆண் நண்பருடன் மனைவி சாட் செய்ததால் விரக்தி அடைந்த கணவன், மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி அலமேலு. இவர்களது 14 வயது மகன் யோகேஷ் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அலமேலு வீட்டில் இருக்கும் போது நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Crime

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அலமேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அறையில் கணவர் அர்ஜுன் மற்றும் மகன் யோகேஷ் இருவரும் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அர்ஜுன் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது மனைவி வாட்சப்பில் அதிகநேரம் சாட் செய்ததாகவும், அதில் ஒரு ஆண் நபருடன் அதிகம் பேசியதாகவும், தான் கண்டித்தும் தனது மனைவி திருந்தாத விரக்தியில் தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.