தமிழகம்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை.! கணவன் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மூக்காயி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் சமீபத்தில் வழக்கம்போல் இந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு மூக்காயி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றதால் மனவேதனையில் இருந்துள்ளார் ஆறுமுகம்.

கடும் சோகத்தில் இருந்த ஆறுமுகம் திடீரென அவரது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement