தமிழகம்

திருமணம் ஆன 5 மாதத்திலே நடந்த சோகம்.! தாம்பத்தியத்துக்கு 'நோ' சொன்ன மனைவி.! கணவன் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

கோவை மாவட்டம் சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பநாயகன

கோவை மாவட்டம் சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பநாயகன்புதூர் பகுதியில் மெடிக்கல் ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த நாளில் இருந்தே இருவருக்கும் தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜேந்திரன் சமீப காலமாகவே  மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், ராஜேந்திரனும், அவரது மனைவியும், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணி வரை, பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையே தாம்பத்திய சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் வீட்டின் ஹாலில் படுத்து தூங்கி உள்ளனர். நள்ளிரவு ஒரு மணிக்கு, பெட்ரூமுக்கு சென்ற ராஜேந்திரன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, 7:00 மணிக்கு, தூங்கி எழுந்த மனைவி, பெட் ரூமுக்குள் சென்று பார்த்தபோது, ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரன் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும், போலீசார் கைப்பற்றியுள்ளனர். திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகியும், மனைவி தாம்பத்திய உறவிற்கு அனுமதிக்காததால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement