தமிழகம்

திருமணம் முடிந்த சில நாட்களில் மேற்படிப்புக்கு சென்ற மனைவி! கதவை சாத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவர்!

Summary:

husband suicide in kanniyakumari


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கிருஷ்ணா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யாவுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

ஆர்யாவும் மருத்துவராக இருந்துள்ளார். இந்தநிலையில் ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத்தில் தங்கி இருந்துள்ளார். கிருஷ்ணா பெற்றோருடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மனைவியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணா, அறைக்கு சென்று வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

கிருஷ்ணா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறல் சத்தம் போட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கிருஷ்ணாவின் உடலை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விசாரணையில், இருவரும் செல்போனில் பேசியப்போது சண்டையிட்டுக்கொண்டதாகவும் அதனால் மனஉளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
 


Advertisement