வாட்ஸ் ஆப்பிற்கு அடிமையான மனைவி! மனைவியின் வாட்ஸ் ஆப் உரையாடல்களை பார்த்த கணவன் எடுத்த முடிவு!

வாட்ஸ் ஆப்பிற்கு அடிமையான மனைவி! மனைவியின் வாட்ஸ் ஆப் உரையாடல்களை பார்த்த கணவன் எடுத்த முடிவு!



husband suicide for wife whats aap chat


கோவையை அடுத்த சிவானந்தபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் சொந்தமாக தையல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கிற வயதில் மகன் இருக்கும் நிலையில் அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் உரையாடி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த அலமேலு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Whatsapp

அவர்களது வீட்டில் இருந்து தேனில் கலந்த சாணிப்பவுடர் மற்றும் அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வரும் மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் கண்டித்துள்ளார். 

ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. சம்பவத்தன்று இரவு அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்து பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.