தமிழகம்

திருமணமான சில நாட்களில் வாட்ஸ் அப்பில் வந்த மனைவியின் புகைப்படம்! அதிர்ச்சியடைந்த கணவன் எடுத்த முடிவு!

Summary:

husband saw wife photo in whats app

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீரமணி என்பவர் அந்த பகுதியில் பாத்திரக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த 22 வயது நிரம்பிய இளம்பெண் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணிற்கும், வீரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் காதலாக மாறியது.

வீரமணி அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக இருந்து அந்த பெண்ணிற்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். அந்த பெண் வீரமணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை கேட்டு உள்ளார். ஆனால் வீரமணி அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

whatsapp photo க்கான பட முடிவு

இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த  நிலையில் அந்த பெண்ணின் கணவரின் செல்போனுக்கு  வீரமணி வாட்ஸப் மூலம் அப்பெண்ணின் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மனைவியை அவரது தாய்வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு இனி உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறியுள்ளார்.இதனால் மனமுடைந்த இளம்பெண், வீரமணியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


 


Advertisement