உடை மாற்றுவதை எட்டிப்பார்த்த நண்பன், போலீசில் புகார் கொடுத்த மனைவியை கொலை செய்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்!



husband-murder-his-wife

சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த உதயகுமார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். உதயகுமாருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலை என்பவருடன் திருமணம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் உதயகுமார் அடிக்கடி தன் நண்பர்களை அழைத்து வந்து தனது வீட்டில் மதுவருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை பலதடவை மனைவி தன் கணவனிடம் கூறியும் கணவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

chennai

இந்நிலையில் ஒருநாள் உதயகுமார் தன் நண்பர்களை அழைத்து வந்து தனது வீட்டில் மது அருந்தியுள்ளார். உதயகுமாரின் மனைவி உடை மாற்றுவதை அவரது நண்பர் ஒருவர் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை தன் கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். ஆனால் அதனை அவர் காதில் வாங்கி கொள்ள வில்லை.

இதனால் கோபம் அடைந்த மணிமேகலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த நிகழ்வு குறித்து அறிந்த உதயகுமார், புகார் கூறியதற்காக தன் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.