குடிப்போதையில் மனைவி என்று கூட பாராமல் கணவர் செய்த பரபரப்பு சம்பவம்...

குடிப்போதையில் மனைவி என்று கூட பாராமல் கணவர் செய்த பரபரப்பு சம்பவம்...


Husband murder her wife

சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தளபதி- சண்முகப்பிரியா தம்பதியினர். தளபதி கடந்த 2 ஆண்டுகளாக வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலையின்றி இருந்தது மட்டுமின்றி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கோபமான சண்முகப்பிரியா வீட்டை தனது பெயரில் எழுதி தரும் படி கணவர் தளபதியிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் தளபதி அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

Murder

இந்நிலையில் நேற்று இரவும் குடிப்போதையில் வந்த கணவரிடம் வீட்டை எழுதி தருமாறு கேட்டுள்ளார் சண்முகப்பிரியா. இதனால் ஆத்திரமடைந்த தளபதி சண்முகப்பிரியாவை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். கத்தி குத்தில் படுகாயமடைந்த சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.