கணவன் கூட இருந்தும் காம ஆட்டம் போட்ட மனைவி.. கள்ளக்காதலன் கொடூர கொலை.. பரபரப்பு சம்பவம்.

கணவன் கூட இருந்தும் காம ஆட்டம் போட்ட மனைவி.. கள்ளக்காதலன் கொடூர கொலை.. பரபரப்பு சம்பவம்.


Husband killed wifes illegal affair near Karur

மனைவியின் கள்ளக்காதலனை கணவன் அவரது நண்பருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மகாதானபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை நிம்மதியாக சென்றுகொண்டிருந்தநிலையில் உமாவுக்கும், லாலாப்பேட்டை சந்தை மேல் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் எப்படியே உமாவின் கணவர் தர்மதுரைக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை, தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதனால் தங்கள் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் கதிர்வேலை கொலை செய்ய தர்மதுரை திட்டம்போட்டுள்ளார். இந்நிலையில் தனது நன்பர் கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கதிர்வேல் வீட்டிற்கு சென்ற தர்மதுரை, தனியாக பேசவேண்டும் என கதிர்வேலை அழைத்துள்ளார்.

இதனை நம்பி தனியாக வந்த கதிர்வேலை தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் ஆகியோர் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.