ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்..! அனாதையான பிஞ்சு குழந்தைகள்..! காதல் கணவனின் சந்தேகத்தால் சின்னாபின்னமான குடும்பம்.!

ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்..! அனாதையான பிஞ்சு குழந்தைகள்..! காதல் கணவனின் சந்தேகத்தால் சின்னாபின்னமான குடும்பம்.!



Husband killed wife who speaks over phone long time

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன் தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவரது மனைவி ஆனந்தி (26). இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு மோகன் குமார்(7) என்ற மகனும் சித்திக் சித்திகா ஸ்ரீ என்ற மூன்று வயது மகளும் உள்ளனர். 

இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இவரது மனைவி ஆனந்தி கடந்த சில வாரங்களாக அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

தனது மனைவி அடிக்கடி செல்போனில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மணிகண்டன் இனி அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதை அடுத்து கணவன் மனைவி இருவரும் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று தங்களை பிரித்து வைக்கும்படி மனு ஒன்றினை அளித்துள்ளனர். 

ஆனால் அங்கிருந்த போலீசார் கணவன் மனைவி இருவரையும் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டிற்கு திரும்பியநிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தமுறை தகராறில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் இருந்த பெரிய கல் ஒன்றினை எடுத்து தனது மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதில் ஆனந்தியின் தலை உடைந்து இரத்தம் கொட்டிய நிலையில் அலறியபடி மயங்கிக் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ஆனந்தி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அதை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆனந்தியின் தாயார் கொடுத்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாணவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு காதல் மனைவியை கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.