எல்லாத்திற்கும் இந்த டிக்டாக் தான் காரணம்!! துடிதுடிக்க கணவர் செய்த கொடூரம்! வெளியான பகீர் சம்பவம்!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

எல்லாத்திற்கும் இந்த டிக்டாக் தான் காரணம்!! துடிதுடிக்க கணவர் செய்த கொடூரம்! வெளியான பகீர் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம், பிரகாசம் கானிகிரி மண்டல் பகுதியை சேர்ந்தவர் பாசகாசிம் இவர் தையல் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் பாத்திமா பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் திருமணமானது முதலே பாத்திமா தேவையில்லாமல் அதிக அளவு செலவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி பாத்திமா டிக்டாக் செயலிக்கு அடிமையாக இருந்துள்ளார்.  மேலும் அவர் வேலைக்கு செல்லும் இடத்திலும், வீட்டில் இருக்கும்போதும் டிக் டாக் வீடியோக்கள் வெளியிடுவதிலேயே பெருமளவில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை.  

இதனால் பாசகசீம் அவர் மீது அடிக்கடி கோபம் கொண்டுள்ளார். மேலும் டிக்டாக் வீடியோ வெளியிடக்கூடாது எனவும் கண்டித்துள்ளார். ஆனாலும் பாத்திமா அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனால் கடுப்பான அவர் சப்பாத்தி கட்டையால் பாத்திமா தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதனை கண்டு பதற்றமடைந்த அவர் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.  அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமாவை அவரது கணவர் தான் கொன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo