தமிழகம்

கள்ளக்காதலை விட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Husband killed wife for illegal affair

செங்குன்றம் அருகே நல்லூர்  ஆட்டந்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தவர் துளசிராமன். இவரது மனைவி அஞ்சம்மாள். இவர்களுக்கு 2 மகளும், 1 மகனும் உள்ளனர்.  இந்நிலையில் அஞ்சம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரியவந்தநிலையில்,  துளசிராமன் கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் பலமுறை கூறி கண்டித்துள்ளார். ஆனால் அவர் இதனை பொருட்படுத்தாத நிலையில்  கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு நேற்றும் இருவருக்குமிடையே இதுகுறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துளசிராமன், பக்கத்தில் இருந்த சுத்தியலால் அஞ்சம்மாளின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து  அஞ்சம்மாள் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் துளசிராமன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இந்நிலையில் குழந்தைகள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அஞ்சம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்  பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள துளசிராமனை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement