அழகான மனைவி! தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன்! விசாரணையில் கூறிய அதிர்ச்சி காரணம்
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ் (36) ருக்மணி (30) தம்பதியினர். தங்கராஜ் தையல் வேலை பார்த்துவருகிறார். ருக்மணி போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ருக்மணி தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார் தங்கராஜ். மனைவியை கொலை செய்தகையோடு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தங்கராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது மனைவி அடிக்கடி யாருடனோ தொலைபேசியில் பேசி வந்ததாகவும், இதனால் அவர் மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் தங்கராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டதாகவும் தங்கராஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின்பேரில் கணவன் அவரது மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.