தமிழகம்

இதெல்லாம் ஒரு காரணமா? காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!

Summary:

Husband killed his wife for naming issue

காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம் என்னும் பகுதியை சேர்ந்தவர் முரளி. தனியார் லேத் கம்பெனி ஒன்றில் வேலைப்பருத்துவரும் இவர் அதேபகுதியை சேர்ந்த எடுத்த வானமாதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 35 நாட்கள் ஆன நிலையில் குழந்தைக்கு பெயர் வைக்க தீர்மானித்துளனர். இந்நிலையில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் கணவன் மனைவி இருவரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த முரளி மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவரது மனைவி உயிரிழந்ததை அடுத்து முரளி கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement