சீக்கிரம் தண்ணீர் கொண்டு வா..! சற்று தாமதப்படுத்திய மனைவி.! பின்பு அரங்கேறிய சோகம்.!

சீக்கிரம் தண்ணீர் கொண்டு வா..! சற்று தாமதப்படுத்திய மனைவி.! பின்பு அரங்கேறிய சோகம்.!


husband-killed-his-wife-FLQH68

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தினத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறி மனைவியை திட்டியுள்ளார்.

நீ சமைத்த சாப்பாடு சரி இல்லை போயிட்டு தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய மனைவி காளியம்மாள் தண்ணீர் கொண்டுவர கொஞ்சம் தாமதம் ஆனதால் இருவருக்குமிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேல் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். 

Murder

தங்கவேல் அவரது மனைவியை வேகமாக தள்ளியதில் அருகில் இருந்த சுவற்றில் அவரது மனைவியின் தலை மோதி காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.