ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சந்தோசமாக வாழ்ந்த தம்பதி! திடீரென மனைவி நடத்தையில் சந்தேகம்! கணவரின் வெறிச்செயல்!
திருப்பூர் மாவட்டம் சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32). தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர் வைசராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நிஷா பானு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. நிஷா பானு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். இரண்டாவதாக அப்துல் சமதுவைத் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினர் எந்த பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த நிலையில், திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே நிஷா பானுவின் நடவடிக்கைகள் சமதுக்கு பிடிக்கவில்லை, அடிக்கடி போனில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார்.
இதுபோன்று நண்பர்களுடன் அடிக்கடி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என அப்துல் சமது பலமுறை கண்டித்து வந்துள்ளார். ஆனால் நிஷா பானு அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்தநிலையில் சம்பவதினத்தன்று நிஷா போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார், யாரிடம் பேசுகிறாய், போனை கொடு என அப்துல் சமது கேட்டுள்ளார். ஆனால் எந்த பதிலும் அளிக்காத நிஷா பானு போனை தராமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த அப்துல் சமது, அருகிலிருந்து குக்கரை கொண்டு நிஷாவை தாக்கியுள்ளார். மேலும் ஆத்திரம் தாங்காமல் நிஷா பானுவை கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். பின்னர் அவரே அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்,
இதனையடுத்து போலீசார் அப்துல் சமது வீட்டிற்கு சென்று நிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்துல் சமதை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.