மனைவி தன்னைவிட அழகாய் இருக்கிறாள் என்று கணவன் எடுத்த கொடூர முடிவு!!
மனைவி தன்னைவிட அழகாய் இருக்கிறாள் என்று கணவன் எடுத்த கொடூர முடிவு!!

சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வருபவர் துக்காராம். இவர் தன் மனைவி தாராபாய் மற்றும் மூன்று மகன்களுடன் வசித்துவந்துள்ளார். நேற்று காலை தூங்கி எழுந்த துக்காராமின் மூத்த மகன், தனது அப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளான்.
இதுகுறித்து அம்மாவிடம் கூறுவதற்காக மூத்தமகன் சஞ்சய்ராம் அம்மாவை தேடியபோது அவரும் வீட்டினுள்ளே தலை நசுங்கிய படி இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு சஞ்சய்ராம் அலறியுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தாராபாய் அழகாக இருப்பதால் அவர் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு துக்காராம் தகராறு செய்துள்ளார். நீண்ட காலமாகவே இந்த பிரச்சனை நீடித்துள்ளது.
இந்நிலையில் துக்காராம் நள்ளிரவில் கிரைண்டர் கல்லை தாராபாய் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதன்பின்னர் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.