வீட்டிற்கு வந்த அட்வகேட் மகன்.! குடிபோதையில் தாயை சரமாரியாக குத்திய தந்தை.! அடுத்து நடந்த பரிதாபம்.!

வீட்டிற்கு வந்த அட்வகேட் மகன்.! குடிபோதையில் தாயை சரமாரியாக குத்திய தந்தை.! அடுத்து நடந்த பரிதாபம்.!


husband killed his wife

சென்னை தண்டையார்பேட்டை தளபதி.52 வயது இவர், கப்பலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன்  கப்பலில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார், மகளுக்கு திருமணமாகிவிட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தளபதியின் இளையமகன் வீட்டுக்கு வந்தபோது அவரது அம்மாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில் கட்டிலில் படுத்து இருந்த தனது தாய் சண்முகப்பிரியாவை, தனது தந்தை தளபதி கத்தியால் குத்தி கொண்டிருப்பதை பார்த்து பேரதிர்ச்சியடைந்தார்.

தனது மகன் கத்திக்கொண்டு வருவதைப்பார்த்த தளபதி உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது தாயாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தலைமறைவான தளபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நான் மது குடித்துவிட்டு வந்ததால் தனது மனைவி தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் கோவத்தில் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.