தமிழகம்

மனைவியிடம் அனைத்தையும் பறித்து, உடலில் மின்சாரம் பாய்ச்சி கணவன் செய்த கொடூர செயல்!.

Summary:

husband killed his wife

கடலூர் மாவட்டத்தில் ரம்யா என்ற பெண்ணும், இன்பராஜ் என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், வரதட்சணை தொடர்பாக இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து ரம்யாவின் பெற்றோர் தனது மகளை கணவர் இன்பராஜ் வரதட்சணைக் கொடுமை படுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ரம்யா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு இன்பராஜ் தலைமறைவானார். மகள் இறந்துகிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். ரம்யா முகம் வீங்கிய நிலையிலும் அணிந்திருந்த நகைகள் ஏதும் இல்லாமலும் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ரம்யாவை நகைக்கு ஆசைப்பட்டு கணவன் இன்பராஜ் மின்சாரத்தின் மூலம் கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்காக காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியின் மீது மின்சாரம் பாய்த்து கணவர் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement