தமிழகம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.! அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி.! குடிபோதயைல் கணவன் செய்த செயல்.!

Summary:

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆலோன் 51 வயது நிரம்பிய இவருக்கு 45 வயதில் லட்சுமி என

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆலோன் 51 வயது நிரம்பிய இவருக்கு 45 வயதில் லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமாகி, தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை வீட்டில் ஆலோன் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

ஆலோன் வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். லட்சுமி, வீட்டின் எதிரே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு ஆலோன், திடீரென தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதனையடுத்தது அவரே செண்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ஆலோன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆலோன், மது போதைக்கு அடிமையானவர் என்றும், இவர் நீண்ட நாட்களாக  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், சம்பவத்தன்று இரவில் லட்சுமி அயர்ந்து தூங்கியதும், அம்மிக்கல்லை அவரது தலையில் போட்டு கொலை ஒப்புக்கொண்டுள்ளார்.


Advertisement