இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர்... தனிமையில் அழைத்து சென்று நடந்த பயங்கரம்!!

இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர்... தனிமையில் அழைத்து சென்று நடந்த பயங்கரம்!!


husband-killed-his-second-wife-in-karur

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பள்ளசங்கனுர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால்  - மேனகா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தனபால் மாட்டு வண்டி மூலம் குளத்தில் மண் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவரை இழந்து தாய் வீட்டில் வசித்து வரும் மேனகாவின் தங்கை அம்பிகாவுக்கும் தனபாலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து தனபால் அம்பிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அம்பிகா திருமணத்திற்கு பிறகும் தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனபால் 2 வது மனைவி அம்பிகாவை மட்டும் அழைத்து கொண்டு இரவு நேரத்தில் தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்திற்கு மண் எடுக்கச் சென்றுள்ளார்.

Karur

ஏற்கனவே அம்பிகாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தனபால் இது குறித்து அம்பிகாவிடம் கேட்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தால் அவரை சாட்டை குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில் அம்பிகா சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த தனபால், அம்பிகாவின் உடலை அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

Karur

அம்பிகாவை காணாததால் சந்தேகமடைந்த அவரது தாய் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தனபாலை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்பு கொண்டு ஆஜராகியுள்ளார். போலீசார் தனபாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.