தமிழகம்

தலைவலியால் இறந்ததாக கூறப்பட்ட பெண்! உடலை அடக்கம் செய்யும் போது தெரிந்த உண்மை! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

husband killed her wife


சென்னை திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கும் வனிதா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி, இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வனிதா திடீரென உயிரிழந்து விட்டார். இந்தநிலையில் அவரது கணவர் ஏழுமலை ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார்.

அங்கு உறவினர்களிடம் அடிக்கடி ஏற்பட்ட தலைவலியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வனிதா இறந்ததாக ஏழுமலை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மனைவியின் உடலை அடக்கம் செய்யும் வேலையில் ஏழுமலை ஈடுபட்டார். ஆனால் வனிதாவின் தந்தை குப்புசாமி, தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அடக்கம் செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கட்டையால் தாக்கப்பட்டதில் வனிதா உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏழுமலையிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தனக்கும், தன் மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் வனிதாவின் தலையில் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த வனிதாவிற்கு அருகிலுள்ள மருந்தகத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து வனிதாவிற்கு தலையில் வலியும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென இறந்து விட்டார் என கூறினார். இதனையடுத்து போலீசார் ஏழுமலையை கைது செய்துள்ளனர்.


 


Advertisement