தமிழகம்

இப்படியும் இருப்பாங்களா! கொரோனோவால் பாதிக்கப்பட்ட மனைவி! இரக்கமின்றி கணவர் படுத்திய கொடுமை!!

Summary:

தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், லட்செட்டிபெட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெத்தய

தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், லட்செட்டிபெட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெத்தய்யா. இவரது மனைவி நரசம்மா. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நரசம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பெத்தய்யா தனது மனைவி நரசம்மாவை வீட்டிற்குள் வரக்கூடாது என கூறியுள்ளார்.

மேலும் வீட்டிற்கு வெளியேயுள்ள சிறிய அளவிலான பாத்ரூமில் அவரை தங்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு போதிய உணவை கூட கொடுக்காமல் கஷ்டப்படுத்தி வந்துள்ளார். மேலும் கழிவறைக்குச் செல்ல கூட அனுமதிக்காமல் தடைவிதித்ததாக கூறப்படுகிறது.

    

இவ்வாறு தனது கணவரிடம் நரசம்மா படும் அவஸ்தையை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்த போலீசார், பெத்தய்யாவிற்கு கொரோனா குறித்த மனநல ஆலோசனைகளை வழங்கி அவரது மனைவியை வீட்டில் உள்ள தனியறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


Advertisement