தமிழகம்

கோவிலுக்கு சென்ற முதல் மனைவி! வேறொரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக நின்ற கணவன்!

Summary:

husband got Second marriage


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ். 48 வயது நிரம்பிய இவருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உறவினர் பெண்ணான ஸ்டெல்லா என்பவருக்கும்திருமணம் நடைபெற்று இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவர் சுபாசுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்டெல்லா அவரது அம்மாவின் வீட்டிற்கு மகன்களுடன் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுபாஷ் இரண்டாவது திருமணம் செய்ய ஆசைப்பட்டு  வரன் தேடியுள்ளார். 

marriage க்கான பட முடிவு

இந்தநிலையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவரை வரனாக பார்த்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து சுவாமிமலையில் இருக்கும் முருகன் கோவிலில் இரண்டாவது திருமணம் செய்து மாலையும் கழுத்துமாக கோவிலை வலம் வந்துள்ளார்.

அப்போது எதிர்ச்சியாக கோவில்களை சுற்ற பார்க்க ஸ்டெல்லா மகனுடன் நேற்று சுவாமிமலைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மாலையும் கழுத்துமாக நின்ற சுபாஷை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் ஸ்டெல்லா புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சுபாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement