கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி.! அதன் பின் கணவன் செய்த செயல்.!

கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி.! அதன் பின் கணவன் செய்த செயல்.!


husband fell wifes feet

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் கூலி வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில் முத்துராஜுக்கும், கம்பாபுராவை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

இதுபற்றி முத்துராஜின் குடும்பத்தினருக்கும், லட்சுமியின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

Husband

இதனையடுத்து, நேற்று முன்தினம் முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருந்துள்ளனர். இதுபற்றி அறிந்த முத்துராஜின் மனைவி மற்றும் குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராஜையும், அவரது காதலியையும் கையும், களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்தநிலையில், மனம் திருந்திய முத்துராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார். பின்னர் தான் செய்தது தவறு என்று உணர்ந்த முத்துராஜ், தனது மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அவரின் இச்செயல் காவல் நிலையத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.