பரிதாபமாக போன பிஞ்சு உயிர்.. தாயும் கவலைக்கிடம்.. கணவனின் அஜாக்ரதையால் நடந்த சோகம்..

பரிதாபமாக போன பிஞ்சு உயிர்.. தாயும் கவலைக்கிடம்.. கணவனின் அஜாக்ரதையால் நடந்த சோகம்..


husband-done-delivery-for-wife-with-youtube-baby-dead

யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கோமதி. மரச்செக்கு வியாபாரம் செய்தும்லோகநாதனுக்கு , கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம்நடந்துள்ளது.

திருமணம் முடிந்த சில மாதங்களில் கோமதிகருவுற்ற நிலையில், மனைவியை மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக அழைத்துசென்றுள்ளார் லோகநாதன். இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதி குழந்தை பிறப்புக்கான நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய நாளில் கோமதிக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படவில்லை.

மருத்துவர்கள் கூறிய நாளில் கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. மருத்துவர்கள் கூறியதில் இருந்து 5 நாட்கள் கழித்து, கடந்த 18-ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லத்த லோகநாதன், தனது அக்கா கீதா உதவியுடன் மனைவிக்கு வீட்டிலையே பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.

யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளதாககூறப்படும் நிலையில், கோமதிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையிலே பிறந்துள்ளது. மேலும் கோமதிக்கு ரத்தப் போக்கு அதிகரித்து, ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் லோகநாதன், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்துக்கு மனைவி கோமதியை அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் லோகநாதன் மற்றும் கீதாவிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.