தமிழகம்

மனைவியின் கல்லறையில் இறந்து கிடைந்த கணவர்! பதறிப்போன உறவினர்கள்!

Summary:

husband died in wifes Cemetery

கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். லாரி டிரைவரான இவருக்கும் கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணிற்கும் திருமணமான நிலையில் 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர்.

கடந்த ‌8 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை கோளாறு காரணமாக சிவகுமாரின் மனைவி அம்பிகா உயிரிழந்தார். இந்த நிலையில், சுடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த அம்பிகாவின் கல்லறையின் மீது அவரது கணவரான சிவகுமார், இறந்து கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவகுமாருக்கு அருகில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டில் கிடந்ததை வைத்து அவர் விஷம் அருந்தி உயிரிழந்திருப்பதாக சந்தேகித்தனர். இந்நிலையில், சிவகுமாரின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் சுடுகாட்டிலேயே போராட்டம் நடத்தினர். 

போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 4 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அனைவரும் சுடுகாட்டில் இருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அம்பிகாவின் சகோதரர்கள் சிவாவை அடித்துக் கொன்றதாகக் கூறி சிவகுமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அம்பிகாவின் சகோதரர்களை அழைத்துச்சென்று  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement