"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவிக்கு, கணவரால் துடிதுடிக்க காத்திருந்த பேரதிர்ச்சி!!
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீம். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த ஆண்டு தஸ்லீம் ஆயுப் மன்சூரி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் ஆயுப் மன்சூரிக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகியுள்ளது. மேலும் அவர் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருவதை மறைத்து தஸ்லீமை திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் இது குறித்து தெரிந்து கொண்ட தஸ்லீம் அவர்களை விட்டுவருமாறு ஆயுப் மன்சூரியை வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் மன்சூரியும் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இவ்வாறு தற்போதும் அவர்கள் இருவருக்குமிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த தஸ்லீம் அவருக்கு முத்தம் கொடுக்க சென்ற போது மஞ்சூரி அவனது நாக்கை இழுத்துப் அறுத்துப்போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தஸ்லீம் அவரது அக்காவிற்கு வீடியோகால் செய்த நிலையில் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த அவர் தஸ்லீமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சையின் மூலம் நாக்கு ஒட்டப்பட்டது. மேலும் போலீசார்கள் ஆயுப் மன்சூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.