குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்... மனைவி இறந்ததாக எண்ணி தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம்..!

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்... மனைவி இறந்ததாக எண்ணி தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம்..!


husband committed suicide in coimbatore

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தானும் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் வசித்து வந்தவர் பூபாலன். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஷாலினி. இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மனைவியுடன் மீண்டும் ஏற்பட்ட தகராறின் போது, ஆவேசமடைந்த பூபாலன் மனைவியின் முதுகில் கத்தியால் வேகமாக குத்தியுள்ளார். 

Coimbatore

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாலினி இறந்துவிட்டதாக நினைத்த பூபாலன், மனமுடைந்து பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாலினி அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.