தமிழகம்

நண்பனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்! குடிப்பழக்கத்தால் நேர்ந்த கொடூரம்!

Summary:

husband commits suicide


கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் அஜித் இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக இருந்துள்ளார். இவரும்  அதே பகுதியைச் சேர்ந்த சஜிதா என்ற இளம்பெண்ணும் 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சஜிதா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்தவர். இறந்த சஜிதாவின் கணவரின் நண்பர் தான் அஜித். நண்பன் இறந்தபிறகு அஜித் சஜிதாவுக்கு உதவிகள் செய்து வந்தார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறி சஜிதாவையே அஜித் திருமணம் செய்து கொண்டார்.

suicide க்கான பட முடிவு

அஜித்துக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அதை சஜிதா கண்டித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அஜித் குடித்து விட்டு வந்த போது, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னையின்போது திடீரென அஜித் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் சஜிதாவின் சுடிதார் துப்பாட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அஜித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் 
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement