தமிழகம்

எல்லோரையும் கண்கலங்கவைத்த கணவன் மனைவி பாசம்..! ஒரே குடும்பத்தில் நடந்த இரண்டு மரணம்.! கதறும் பிள்ளைகள்.!

Summary:

Husband commit suicide after wife dead

மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் பத்மா இருவரும் அதே பகுதியில் டீ கடை ஒன்றை நடத்திவந்துள்ளனர்.

காலையில் இருந்து மாலை வரை கணவன் மனைவி இருவரும் கடைக்கு செல்வது, டீ வியாபாரம் செய்வது பின்னர் ஒன்றாக வீட்டிற்கு வருவது என இருந்துள்ளனர். இந்நிலையில் பத்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் பத்மா கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்தநிலையில் குமார் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார். தன்னை பார்த்துக்கொள்ள 6 பிள்ளைகள் இருந்தும் எப்போது தன் கூடவே இருந்த மனைவியை பிரிந்து மன வேதனையில்இருந்த குமார் நேற்று இரவு விஷம் அருந்திவிட்டு தனது பிள்ளைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது குமார் திடீரெனெ வாந்தி எடுக்கவே, பதறிப்போன அவரது மகன்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement