தமிழகம்

காதல் திருமணம்! அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

Summary:

Husband commit suicde after wife dead

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் வசித்து வந்தவர் சிவகுமார். 31 வயது நிறைந்த இவர் சிற்ப தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவகுமார்,  சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இருமகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் கொரோனோ பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சிற்ப தொழிலாளியான சிவகுமாருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் சமீபகாலமாக கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் சிவகுமார் சமீபத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட சரண்யா அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவகுமார் மனைவி சரண்யாவின் நடத்தையை சந்தேகப்பட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரண்யா நள்ளிரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவகுமார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் பெரும் வருத்தத்தில் இருந்த சிவகுமார் வீட்டிற்கு வந்து மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement