தமிழகம் காதல் – உறவுகள்

புதுமனைவியை பெல்ட்டால் அடித்து, நைட்டியோடு விரட்டிய காதல்கணவன்.! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!!

Summary:

husband beat and sendout wife outside

கோவையில் வசித்து வருபவர் சார்லஸ். இவர் சௌமியா என்ற கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சௌமியாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தநிலையில் அவர்கள் அந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சௌமியா வீட்டை விட்டு வெளியேறி, சார்லஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சார்லஸ் குடும்பத்தார்கள் இருவருக்கும் சிறப்பாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் சார்லசும் சௌமியாவும் தங்களது இளவயது கதைகளை பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்பொழுது சௌமியா ஆர்வம் மிகுதியில் தனது கணவர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார் என எண்ணி, தனது இளவயது காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார். அதனை கேட்டு கடுப்பான சார்லஸ் உடனே சௌமியாவை பெல்ட்டால் அடித்து,தனது திருமணத்திற்கு செலவு செய்த இரண்டு லட்சம் ரூபாயை உங்கள் வீட்டிலிருந்து வாங்கி வா என கூறி நைட்டியோடு வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார். 

பின்னர் அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறிய சௌமியா, வழியில் சென்ற நபரது  செல்போனை வாங்கி தனது வீட்டிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உள்ளார். பின்னர் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சௌமியா தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 


Advertisement