தமிழகம்

பேருந்தில் பயணம் செய்த கணவன் - மனைவிக்கு கொரோனா..! பாதி வழியில் இறங்கிய பயணிகள், ஓட்டுநர், நடத்துனர்..! பரபரப்பு சம்பவம்..!

Summary:

Husband and wife traveled in bus who gave corono positive

பேருந்தில் பயணம் செய்த கணவன் - மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வர தாமதமானநிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பண்ருட்டி அருகே காடாம்புலியூரு பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பேருந்து பாதிவழியில் சென்றுகொண்டிருந்தபோது சுகாதார ஊழியர்கள் போன் செய்து கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுகாதார ஊழியர்கள் அறிவுறுத்தலின்படி போனை பேருந்து நடத்துனரிடம் கொடுக்க, சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறி, அவர்களை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பேருந்தை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி அவர்களை இறக்கிவிட்டுள்ளனர். மேலும், சக பயணி இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததும் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து பேருந்தில் இருந்து இறங்கினர்.

மேலும், பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தை சாலை ஓரத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் பேருந்து ணிமனைக்கு எடுத்துச் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement