கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
தொழிலதிபர் வீட்டில் வேலை பார்த்த இளம் ஜோடி!! வீட்டின் கதவை திறந்தபோது தொழிலதிபர் கண்ட அதிர்ச்சி காட்சி!! பரபரப்பு சம்பவம்..
தொழிலதிபரின் வீட்டில் வேலைபார்த்துவந்த இளம் ஜோடி வீட்டில் இருந்த பணம், நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். பிரபல தொழிலதிபரான இவர் தனது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த கணவன் மனைவியையும் மேலும் நான்கு பேரையும் வீட்டு வேலைக்காக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் குர்மீத் சிங் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் வேலைபார்க்கும் பணியாளர்கள் மட்டும் இருந்துள்ளனர். இதனிடையே வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய குர்மீத் சிங் குடும்பத்தினர், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது, நேபாளத்தை சேர்ந்த தம்பதிகளை தவிர மற்ற பணியாளர்கள் அனைவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த பலலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து குர்மீத் சிங் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே பணியாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில், சிகிச்சைக்கு பின் அவர்கள் குணமடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில், நேபாளத்தை சேர்ந்த தம்பதி மற்ற பணியாளர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்துகொடுத்துவிட்டு, வீட்டில் இருந்த பணம் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நேபாளத்தை சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.