சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி! அதிர்ச்சி காரணம்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி! அதிர்ச்சி காரணம்!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆண் குழந்தை வேண்டி 16 வயது சிறுமியை கடத்திச் சென்று  கணவனுக்கு சிறுமியை இரண்டாவது திருமணம் செய்த மனைவி மற்றும் கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மனைவி செல்லக்கிளி. இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் வாரிசுக்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளனர்.

அந்த சிறுமே வீட்டில் இல்லாததால் சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அசோக் குமார், செல்லக்கிளி ஆகியோர் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, சீரழித்த குற்றத்துக்காக அசோக்குமார் மற்றும் செல்லக்கிளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo