நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
"அங்கிள் வேண்டாம் ப்ளீஸ்.." +2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு.!! போலீஸ்காரர் கைது.!!
நெல்லை ஏர்வாடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரரிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரருக்கு பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த கலை செல்வன்(35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இவர் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி கேடிசி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த கலைச் செல்வனுக்கு பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களின் மகளான பிளஸ் டூ மாணவியுடன் நன்றாக பேசி வந்திருக்கிறார் ஆனந்த கலைச்செல்வன்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில் அந்த மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் போது அங்கு சென்ற ஆனந்த கலைச்செல்வன் மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. மேலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்திருக்கிறார். இந்தக் கொடுமைகள் சில காலமாக தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: குலுங்கிய கார்., தறிகெட்ட வேகம்.. தேவர் குருபூஜைக்கு காரில் அதகளம் செய்து பயணம்.! பகீர் வீடியோ.!
போக்சோ வழக்கில் கைது
இந்நிலையில் ஆனந்த கலைச்செல்வனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போலீஸ்காரர் ஆனந்த கலைச் செல்வனை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: #Breaking: சென்னை உட்பட 23 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை; அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.!